உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

மட்டுமே மிச்சம்!

இளைத்தவர் தம்மை எவரே

ஏந்திக் காப்பார்?

வலுத்தவர் முன்னே வாய்த்த சாட்சியும்

வாயை மூடி வழியே போகுமோ?

பொறாமை

நல்ல பொழிவைக் கையொலி செய்து

வரவேற்கின்றோம்!

நல்ல நடிப்பைப் பாராட்டி

மகிழ்கின்றோம்!

நல்ல கலையழகைக் கண்ணிமையாமல்

கண்டு களிகூர்கிறோம்.

நல்ல இசையைக் கேட்டுத்

தலையாட்டமும் தாளமும் போடுகின்றோம். இவையெல்லாம் வேண்டத் தக்கனவே.

ஆனால், நல்லவனாக ஒருவன் வாழ்வதை,

வரவேற்பதில்லை;

வாழ்த்துவதில்லை;

பின்பற்ற எண்ணுவதில்லை;

இவையெல்லாம் போகட்டும்!

எதிரிட்டு நில்லாமல்,

ஏசாமல்,

எரிச்சல் படாமல்

இருக்கவாவது கூடாதா?

புகழ் வழிப் பொறாமை - பொறாமையுள் எல்லாம்

தலையாய பொறாமை போலும்!

நல்லவனாக வாழ்வது அப்படியென்ன,

பொல்லாமை யாகி விடுகின்றது!