உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

மூவர் முறை மன்றம்

செங்கல் சொன்னது:

“நிறத்தால் செம்மையன் யான்.

செங்கோல் சொன்னது:

"நேர்மையால் செம்மையன் யான்' செந்தாமரை சொன்னது:

நிறச் செம்மை போதுமோ?

நேர்மைச் செம்மை போதுமா?

பொலிவும் கலையும் பொதுமையும் புகுதல் வேண்டாவோ?

மூவரும் கூடி முறையிட்டு ஆவதென்?

மூவரும் கூடிய 'முறை மன்றம்' உண்டாயின்

யாவரும் போற்றும் முறைமை ஆமே!

தந்தால் தரக் கேட்கலாம்

நாற்காலிக் குரிய மதிப்பைத் தரவேண்டுமாம்! தர வேண்டியதே!

சீருடைக் குரிய மதிப்பைத் தர வேண்டுமாம்! தர வேண்டியதே!

தலைமைக் குரிய மதிப்பைத் தர வேண்டுமாம்! தர வேண்டியதே!

அறிவுக் குரிய மதிப்பைத் தர வேண்டுமாம்! தர வேண்டியதே!

அகவைக் குரிய மதிப்பைத் தர வேண்டுமாம்! தர வேண்டியதே!

வேண்டும் வேண்டும் என்று இவ்வாறு கேட்டுப் பெறும் உலகம்,

மாந்தப் பிறப்புக்குத் தர வேண்டும்

மதிப்பைத் தருகிறதா?

தந்தால் அல்லவோ தரக் கேட்கலாம்|

85