உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

அருவி

குற்றால அருவி குழந்தையாய்த் தவழ்ந்தது அவ்வளவு தூய்மை! இனிமை!

ஓடஓட ஓட்டிய அழுக்கில்ஒன்றிப் போனது!

ன்னும் இன்னும் ஓட ஓட அழுக்கு!

83

மூக்கைப் பிடித்து ஓட ஓட நாற்றமெடுக்கும் அழுக்குச்

சாக்கடை!

அருவிக் குழந்தை வளர்ந்த மாந்தனால் 'சாக்கடை' ஆகிய கேடு இதுவே!

அருவி சொன்னது:

"அருவிக் குழந்தையாய்த் தூய்மையின் காலமெல்லாம் நான் இருந்திருப்பேனே!

வடிவாய்க்

இந்த நாறிய நெஞ்ச மாந்தன் தன்னலக் குறியால் என்னை நாற வைத்தலை நாடறியாதோ?

நீயறியாயோ?

நீங்களோ அறிவறி மாந்தர்?

வலுத்தவர் முன்னே

பனைமரத்தின் மேலே சுற்றிச் சுற்றி

வட்டமிட்டது பருந்து;

எங்கோ போயிருந்த அணிலின் குஞ்சு,

இரைச்ச லிட்டது அஞ்சி;

பனையும் பருந்தும், புல்லில் நின்ற

பனித்துளிமேலே பளிச் செனத் தெரிந்தன.

பனித்துளி குஞ்சைக் காக்குமா?

தாயணில் வந்து தாவி எழுந்தது.

பனையில் தாவலாம்; பனைமேல் இருந்து

எடுத்துப் பறந்த

பருந்துமேல் தாவ ஆகுமோ?

மோதிக் கொண்டதும் முட்டிக் கொண்டதும்