உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

தன் குருதி தனக்கே போதாமல் தள்ளாடும் ஒருவனை வலிந்து பற்றிக் குருதியை எடுப்பது - அவனே தன் நெருக்கடியால்

தரினும் எடுப்பது

நன்கொடை அன்று!

அது, வன்கொடை.

வறுமையால் வாடும் ஒரு குடும்பத்தில் மாப்பிள்ளைக் கொடை - மணக் கொடை -

என்னும் பெயர்களால் ஊரறிய

நாணமின்றிக்

குருதி

காடையெனப் பெறுவது, குருதியில்லானிடம் உறிஞ்சும் வன்கொடைக்கும் வன்கொடையே.

தன்னுழைப்பால் வாழ இயலாதான், வாடுவார் தருங்கொடையாலா வாழ்ந்து விடுவான்?

அமைப்பு

கட்டுக் கோப்புடைய ஒன்று

அமைக்கப்பெற்ற ஒன்று - அமைப்பு.

திட்டுமிட்டு

அவ்வமைப்பு அமைப்பாக இருந்து பயனில்லை.

அஃது இயக்கமாக வேண்டும்.

இயக்கம் இயங்குதலை உடையது.

இயங்குதல் பிறருக்கு நலமாவதுடன் அதன் நலத்துக்கும்

தூய்மைக்கும் இடமாக்கும்.

தேக்கமாக நின்று விட்டால்

கேடுமாகும்.

பயனில்லாததுடன்

நீர் இயக்கமாக இருக்கும்போது உண்டாகும் நன்மை என்ன? அது தேக்கமாய் குட்டையாய் -போனால் உண்டாகும் முடைநாற்றம் என்ன?

-

நாட்டுக்கும் வீட்டுக்கும் ஏன் ஒருவன் கூட்டுக்கும் கூட இயக்கம் வேண்டும்.

தேக்கம் கூடாது.

தேங்கிப் போன வாழ்வு - ஏங்கிப் போன வாழ்வு!

தூங்கிப் போன வாழ்வு!