உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

81

கள்ளும் ஆகும்!

பாளையில் இருக்கும் வரை 'பாழ்மை' இல்லை!

பானையில் வந்ததும் 'பாழ்மை' ஏறுகிறது.

பானையில் தானேயா பாழ்மை ஏறியது?

பாழ்மனம், பயன்மிகு பதனீரின் பதன் கெடுத்துப் பாழும் கள்ளை உண்டாக்குகிறது!

தெளிந்த உள்ளம் பதனீரைக் கண்டது.

கலங்கல் உள்ளம் கள்ளைக் கண்டது.

மாந்தன் உள்ளங் கெட்டால், ஓரறிவு உயிரும் கெடும் என்றால், ஆறறிவுயிரும் கெடாது போகுமா என்ன?

எதுவும் மாந்தன் உளநிலையே 'உளநிலை' யாகின்ற தன்றோ!

பட்டம்

கழுதையின் கழுத்தில் 'குதிரை' என எழுதிய அட்டையை மாட்டினால், கழுதை, குதிரையாகியும் விடாது.

குதிரையின் கழுத்தில் 'கழுதை' என எழுதிய அட்டையை மாட்டினால், குதிரை, கழுதையாகியும் விடாது.

அது போல் ஒருவன் பட்டங்களாகிய அட்டைகள் மட்டும், அவன் அளவு கோல்கள் ஆகிவிட மாட்டா!

அவன் செயலாண்மையே அளவுகோல்!

பட்டமே பெறாரும்,பட்டம் பெற்றாரும்

எட்டா உயரத்தில் பட்டம் பறப்பதுபோல்

பறந்து நிற்கும் காட்சி உலகு காணாததா?

வன்கொடை

குருதி வளமிக்கவர் குருதிக்கொடை தருவது அவர்க்கும்

நன்மை; அதனைப் பெறுவார்க்கும் நன்மை. குமுகாயத்திற்கும் நன்மை.