உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

பொறியியல் படிக்கிறான்;

பொறிகளை இயக்குகிறான்.

பொறிகளைக் கண்டும் பிடிக்கிறான்;

ஆனால், தன் பொறிகளைக்

தெரியாமல் வாழ்வில் புலம்புகிறான்!

கட்டிக் காக்கத்

வேண்டியவற்றை விடுத்து வேண்டாதவற்றைப் பற்றிக்

கொண்ட பயன்

து.

உதவி

பிறருக்கு உதவியாக வாழ்வது என்பது என்ன?

மலையைப் புரட்டுதலா?

மலையைப் புரட்டுவார் புரட்டட்டும்.

வழியில் உள்ள குழிப்பள்ளத்திற்கு ஒரு கூடை மண்ணைப் போடுதலும் உதவிதானே!

எளிய எளிய வழிகளாலும் எவருக்கும் உதவியாக வாழலாமே!

தெருவில் நின்று பார்ப்பவர்க்கும் மணிதெரியும் அளவில் கடிகாரத்தை வாயிலுக்கு நேரே மாட்டி வைக்கலாமே! இது எத்தனை பேர்க்கு உதவியாகின்றது.

புதிது வாங்க வேண்டியது இல்லை! புதிய இடம் வேண்டியது இல்லை! இருக்கும் பொருள் - இருக்கும் இடம்!

நெஞ்சில் இடம் இருந்தால் நிலைவாயில் நேருக்குக் கடிகாரத்தை மாட்டிவிட்டுப் பிறர்க்கு உதவியாக்கிவிடலாம்! அவ்வளவே!

உதவி என்பது உள்ளச் சுரப்பு!

அள்ளித் தருவதா, ஆய்ந்து தருவதா, அருமை உரைப்பதா அவரவர் நிலையைப் பொறுத்தது!

உளநிலை

பாளையைச் சீவி விட்டால் சுவை நீர்!

அச்சுவை நீரே பதனீரும் ஆகும்!