உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

கலையும் வாழ்வும்

குடும்பத்தின் உள்ளே 'நடப்பே' செல்லும்!

79

குடும்பத்திற்கு வெளியே 'நடிப்பும்' சில காலம் செல்லும்! வீட்டுக்கு வெளியே வாழ்வைக் 'கலை' யாக்கிவிடலாம்! வீட்டுக்கு உள்ளே வாழ்வை 'வாழ்' வாக்கியே தீர

வேண்டும்!

நடிப்பும் கலையும் பளிச்சிடல்கள்!

கண்ணைப் பறிப்பவை!

கருத்தைப் பறித்து வயப்படுத்துபவை!

நடிப்பார்க்கும் கலைவல்லார்க்கும் அவை வாழ்வுத் தொழிலாக அமைந்தவை!

ஆனால், வாழ்வார்க்கு வாழ்வும் நடப்பும் அல்லவோ வாழ்வாக இருப்பவை!

மின்வெட்டை எவ்வளவு நேரம் பார்க்க முடியும்? மின்வெட்டுப் போலும் ஒளிவெட்டில் எவ்வளவு நேரம் உவப்புற முடியும்?

கலையும் வாழ்வும் தனித்தனித் தன்மைய என்பதை

யறியாரின் இணைந்த வாழ்வு

-

குடும்ப வாழ்வு

-

எப்படி

உள்ளது? எண்ணினால் இரண்டும் தனித்தனி உலகாதல்

புலப்படும்.

வேண்டியது

அறிவு மிகமிக ஆரவாரம் மிகுகின்றது.

ஆனால், மிக வேண்டியது அடக்கம்.

பதவி மிகமிகப் பகட்டு மிகுகின்றது;

ஆனால், மிக வேண்டியது பண்பாடு.

செல்வம் மிகமிகச் செருக்கு மிகுகின்றது;

ஆனால், மிக வேண்டியவை செம்மையும் பணிவும்

சால்பும்.