உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இளங்குமரனார் தமிழ்வளம் -33

ஐந்துபேரைச் சிந்திக்க வைப்பதினும் அருமையான பணி ஒன்று உண்டு!

அது, அந்த ஐவரில் ஒருவரையேனும் செயலாற்றத் தூண்டும் செவ்விய கருத்துரை வழங்குவதாகும். செயலால் சிறந்து வளர்ந்த உலகுக்குச்

செய்கடன் என்ன?

செயல்வல்லார் தொடர் தொடராகச்

சிறந்தோங்கச் செயலாற்றுவதேயாம் இவை ஒன்றில் ஒன்று ஓங்கிச் சிறந்தவை!

தன்னை மறத்தல்

தன்னை மறக்கும் இன்பம் பெரிதே!

ஆனால், தன்னை மறக்கச் செய்யவல்ல இன்பங்கள் எல்லாம் பாராட்டத் தக்கனவோ?

குடியன் தன்னை மறக்கிறான்!

போதையன் தன்னை மறக்கிறான்!

சூதன் தன்னை மறக்கிறான்!

கிறுக்கன் தன்னையே மறக்கிறான்!

இனித் தன்னை மறந்த தவத்தவனும், தொண்டனும், உழைப்பனும்,

படிப்பனும் இலனோ?

முன்னவனும், பின்னவனும் ஒப்பனோ?

எவன் தன்னை மறப்பு, பிறரை எழுப்பிப்

பெறற்கரிய பேறுபெறச் செய்யும்?

அவன் தன்னை மறப்பே, வீடுபேறாம்

தன்னை மறப்பு! தகுமறப்பு!

மற்றவை தன்னையும் அழித்து உலகையும்

அழிக்கும் கயமைத் தன்னை மறப்பு!

கிறுக்குத் தன்னை மறப்புக்கு. என்ன செய்வது? இரங்கத் தக்கது அது!