உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

77

அமைந்த போக்கு இல்லை; ஆய்ந்த முடிவு இல்லை. வை எங்கே கொண்டு போய் நிறுத்துகின்றன? வாழ்வைத் துரத்தித் துரத்தி அலைக்கழிக்கின்றன! ஐந்து மணித்துளிப் பொழுது வண்டிக்குக் காக்க முடியவில்லை.

பத்துமுறை கடிகாரத்தைப் பார்க்க ஏவுகின்றது!

ஒருகல் தொலைவு நடக்க ஆகும் பத்துமணித்துளி செலவிட மனம் சைவது இல்லை; நெருக்கடி ஒத்துப் போவதில்லை.

ஓரிரு மணித்துளியில் வண்டியேறி ஓடவே விரைகின்றது. காலப் போக்கும் கடமைப் போக்கும் அப்படி.

இவற்றால் 'மெது' என்பது எதிலும் இல்லை.

குடிக்க விரைவு என்ன ஆகிறது?

உண்ண விரைவு

-

குளிக்க விரைவு -உடுத்த விரைவு

-

-

மாந்தன் நிலை பொறியாகிறது.

கலை மாய்கிறது; கனிவு மாய்கிறது: பண்பாடு சாய்கிறது;

அமைதி ஓய்கிறது.

மண்ணில் செல்லவும் விரைவு.

விண்ணில் பறக்கவும் விரைவு.

விரைவுக்குத்தக்க ஆக்கமும் விரைவு

அழிவோ அதனினும் விரைவு!

ஒன்றில் ஒன்று ஓங்குதல்

ஆயிரம் பேரைச் சிரிக்க வைப்பது

அருமையான திறம்தான்!

அதனினும் ஐந்துபேரைச் சிந்திக்க வைப்பது

அருமையான பயன் ஆகும்!

ஏனெனில் வாழ்வு, சிரித்து மகிழமட்டும்

அமைந்தது அன்றே!