உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

பாடைக் கம்பு

'பாடைக் கம்பை ஒருபோடு போடு' என்றான் ஒருவன்.

ஓங்கி வெட்டினான் ஒருவன்.

பாடைக் கம்பு நினைத்தது:

"நான் என்ன கேடு செய்தேன்?

என் மேல் என்ன பழி?

ஏன் இந்தக் கடுப்பு?

நான் கொன்றேனா? கொல்லத் தூண்டினேனா? செத்தவனைச் சீராகக் கொண்டுவரப் பயன்பட்டது என்

குற்றமா?

எங்கோ கிடந்த என்னை எடுத்துக் கொண்டுவந்து பயன்படுத்திய பின்னே பாழ்படுத்த வேண்டுமா?

இன்னொருவரைப் பிணமாக்கி எடுத்துக் கொண்டுவர நானேயோ நடந்து வந்து விடுவேன்?

இது 'சாத்திரம்' என்றால், அப்பொய்ச் சாத்திரத்தின் மேல், ஒரு போடு போட முடியாத நீ என்னைப் போடுகிறாயா போடு!

இழவுக்கு நான் உதவினாலும், உங்கள் 'இளக்காரம்' மட்டும் ஒழியாதோ?

எல்லாம் விரைவு:

எதிலும் விரைவு;

எங்கும் விரைவு;

விரைவு

இதன் விளைவு என்ன?

மூச்சும் விரைவு;

பேச்சும் விரைவு;

வாழ்வும் விரைவு!