உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

75

என்னை விலங்காய் - பறவையாய் பாம்பாய் - பல்லியாய் வைக்காமல் மாந்தனாக்கிய பெருமை மொழிக்குத் தானே உண்டு.

அம்மொழியை உருவாக்கியவரை, வளர்த்தவரை, நான் மதியாக்கால், நான் மாந்தன் என மதிக்கத்தக்கவன்தானா?

மாந்தனாக்கிய மாண்பொருளை மதிக்க அறியானை மாந்தன் என்பவனும் மாந்தன்தானா?

காற்று மோதியது;

கீற்றின் கூற்று

கீற்றுப் பறந்தது;

கூரையோ பொள்ளல்;

வீடெலாம் வெள்ளம்!

பறந்த கீற்றைப் பழித்ததால் ஆவதென்? அடித்த காற்றும், பிடித்த மழையும் வெள்ளமாக்கினால் கீற்றென்ன செய்யும்? "கீற்றே உனக்குள ஆற்றல் எங்கே? “உருவிலாக் காற்று மோதலை

உன்னால் பொறுக்க முடியாதோ?"

“கட்டிக் கிடக்கும் அமுக்கும் கயிறும்

கழன்று போன காட்சி உமக் கேன் தெரியவில்லை!

"ஆமாம்! காற்றும் அடிக்கும்

கீற்றும் பறக்கும்

மழையும் பொழியும்

வீடும் வெள்ளமாம்

என்பதேன் உமக்குத் தெரியவில்லை?

சிதையா வகையில் செய்யத் திறமில்லை;

பழித்துக் கூற மட்டும்

பகுத்தறிவுப் பேறோ?