உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

என் காவல் அரணே!

காப்புக் கருவியே!

அழகும் மணமும் ஆக்கமென்றா நினைத்தாய்?

எங்களுக்கு அழிவே, அந்த அழகும் மணமும் அல்லவோ?

சூடிச் சூடிச் சொக்கிப் போனவர்,

நாங்கள்

பார்த்தாயா?

வாடிப்

போனதும், வாரி எறிந்ததைப்

தலைமேல் தாங்குதல் என்றாயே,

காலடியில் அன்று காற் செருப்படியில் கசக்கிய இழிவைக்

கண்டாயா?

முள்ளாக இருந்திருந்தால்,

முன்மதிப்பு இல்லை என்றாலும்

பின்மிதிப்பு நேர்ந்திராதே!

உச்சியில் மிதிக்காமல் ஒதுங்கிப் போயிருப்பரே!

பொலிவு இல்லை ஆனால் என்ன, புண்பாடும் இல்லையே! பூவாகப் பிறந்தது நான் புண்படவா?” - என்றது பூ.

வழியும் மொழியும்

வழியே, உனக்கு நன்றி; மிக நன்றி.

உன்னை உருவாக்கியவர் ஒருவரா இருவரா?

எத்தனை கோடிப்பேர் உன்னை

உன்னை உருவாக்கியவர் ஒரு காலத்தவரா?

உருவாக்கினர்!

எத்தனை எத்தனை காலங்களில் உன்னை உருவாக்கினர்! அவர்களுக்கெல்லாம் நன்றி; மிக நன்றி.

வழிக்கு நன்றி சொல்லும் நான், மொழிக்கும் நன்றி சொல்ல வேண்டும் அல்லவா!

எத்தனை எத்தனை கோடிப் பேர்கள், எத்தனை எத்தனை காலங்களில் உருவாக்கி ஈட்டி வைத்த தேட்டு இந்த மொழி!

வழி நடைக்குக் குறைந்ததோ மொழி நடை?

கருத்தறி கருவியும் கருத்தறிவிக்கும் கருவியும் மொழிதானே!