உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

73

கண்ணே அழகென்றால் - வண்ணமே அழகென்றால் அழகின் அழகாக அல்லவோ தோகைகள் உள்ளன,. என்ன நெட்ட நெடு நீளம்! எத்தனை கற்றைத் தொகுதி! அத்தொகுதி தானே உனக்குத் 'தோகைப்' பெயரைத் தந்தது!

வட்டப்பாறை மேல் நின்று, நின் வண்ணத் தோகை

விரித்து,

எழுச்சியால் ஆடும் ஆட்டம் என்ன ஆட்டம்! சாரல் மழை மஞ்சள் வெயில்!

தாளம் தட்டாமல் ஆடிய ஆட்டம், அம்மவோ கண்ணை டு அகல்வதோ

கண்ட

போதில் தோன்றிக் காணாத போதில்

மறைவது காட்சியாகுமா?

கண்ணுள் தேக்கெறிந்து என்றும் கிடப்பதே காட்சி என்பதைக் காட்டிய கலைமயிலே! கவினே வாழி!

“அரும்பே,

பூவின் குழந்தையே,

முள்ளும் மலரும்

உன் பெயர் 'அரும்பா; இல்லை 'விரும்பா?'

உன் மேல் எத்தனை விருப்பம் மகளிர்க்கு! சூடுவதிலே மட்டுமா, தம் மகளிர்க்குச் சூட்டுவதிலும் எத்தனை விருப்பம்! அரும்பிலே அரும்பிய ஆர்வம் முகையிலே முகிழ்த்ததே - அதுவும் முதிர்ந்து!

நீ மலர்ந்தபோதுதான் அவர்க்கும் என்ன மகிழ்ச்சி!

உன் பருவங்கள் மகளிர் உருவங்களாகிய உள்ளங் களாகிய உவகைதானே பூப்பும்-பூப்பு நீராட்டும் - மண

-

மங்கலமும்!

'தலைமேல் தாங்குதல்' என்பது உன் பேறே போலும்! என்னைச் சீந்துவார் எவர்?' - என்றது முள்.

"முள்ளே,