உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

கேட்டவர்கள் திக்குமுக்காடிப் போயினர். நிலக்கிழான் மதிப்பீடு எப்படி இருக்கிறது! மாட்டுப் பிறவியைப் பார்க்கிலும், மனிதப் பிறவி எத்தகைய இழிவுக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கிறது!

இப்படியொரு கதை புரட்சியாய் வெடிக்கிறது இந்த மண்ணில்! இதோ முல்லாவின் கதையொன்று இதற்குத் தோழமையாய் நடையிடுகிறது.

முல்லாவுக்குக் கோவேறு கழுதையொன்று இருந்தது. அது அவர்க்கு மிகவும் பயன்பட்டது. எங்குப் போகவேண்டு மானாலும், எவ்வளவு சுமை தூக்க வேண்டுமானாலும் அக் கழுதை உதவியாக இருந்தது. அக்கழுதை ஒரு நாள் திடுமென்று இறந்துவிட்டது. முல்லா, கழுதையின் இயல்பை நினைத்தார்; அதன் உதவியை நினைத்தார்; விலை மானத்தை நினைத்தார்; ஒன்றன்மேல் ஒன்றாக அவருக்குத் துயர் பெருகியது. பேரிடி ஒன்றன் மேல் ஒன்றாய் வீழ்ந்தது போல் துன்புற்றார்; துடித்தார்; கரைந்து கரைந்து அழுதார். முல்லா தம் கழுதைமேல் வைத்திருக்கும் பேரன்பை நினைத்துச் சிலர் பாராட்டினர்! சிலர், வியந்தனர். சிலர் இன்பக் கண்ணீர் வடித்தனர்.

முல்லாவைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் பலர் ஊரில் இருந்தனர். அவர்கள், முல்லா தம் கழுதை செத்ததற்காகக் கதறி அழுவதைக் கண்டு வியப்படைந்தனர். "என்ன, முல்லாதாமா இப்படி அழுகிறார், அதுவும் கழுதை செத்ததற்காகவா? என்றனர்.

ஒருவர் முல்லாவினிடம் போய், "முல்லா! நீங்கள் உங்கள் மனைவி இறந்தபோதுகூட இவ்வளவு அழவில்லையே! அமைதியாக இருந்தீர்களே! இப்படிக் கூப்பாடுபோட்டுக் கழுதை இறந்ததற்காக அழுகிறீர்களே! ஏன்? என்று

வினாவினார்.

CC

என்

அதற்கு முல்லா, என் மனைவி இறந்தபோது நண்பர்களும் அன்பர்களும், உறவினர்களும் திரண்டு வந்தனர். 'முல்லா' கவலைப்படாதீர்; உமக்கு நல்ல மனைவி ஒருத்தியைத் தேடித் திருமணம் செய்து வைக்கிறோம்' என்றனர். அப்படியே செய்தனர். இப்பொழுது யாராவது ஒருவர், 'முல்லா. கவலைப் படாதீர்; உமக்கு நல்ல கழுதை ஒன்றை நாங்கள் வாங்கித் தருகிறோம்' என்று சொல்கிறாரா? அப்படிச் சொல்லாத நிலையில் என்னால் அழாமல் இருக்க முடியுமா? என்றார்.