உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

129

'உழைப்பின் உயர்வு' முன்னைக் கதையிலே மணக்கிறது என்றால், 'பெண்ணின் பெருமை' பின்னைக் கதையிலே கமழ்கிறதே! பெருமைப்பட வேண்டியவை இவை!

7. வெல்லுஞ் சொல்

தெனாலிராமன் மைத்துனன் ஒரு குற்றம் செய்து விட்டான். அரசர் அக்குற்றத்திற்கு அவனைக் கொன்று விடவேண்டும் எனத் தீர்மானித்திருந்தார். செய்தி தெனாலி ராமனுக்குத் தெரிந்தது. அவன் அரசரைப் பார்க்கச் சென்றான். அரசர் தெனாலிராமனைக் கண்டு, மிகச் சினங்கொண்டார்; சீறினார். 'இன்று நீ என்ன சொன்னாலும் சரி; நான் அதனைக் கேட்கப் போவதில்லை; நீ சொல்வதற்கு எதிரிடையாகவே செய்வேன்" என்றார் அரசர்.

'அரசே, அப்படியே செய்யுங்கள்; குற்றம் செய்த என் மைத்துனனைச் சும்மா விடக்கூடாது; கட்டாயம் கொன்றே போடவேண்டும் என்று வேண்டிக் கொள்ளவே நான் வந்தேன்" என்றான் தெனாலிராமன்.

(6

தனாலிராமா, உன் சொல்லை

நான் கேட்கப் போவதில்லை. உன் சொற்படி உன் மைத்துனனைக் கொல்ல முடியாது; அவனை வெளியே துரத்தி விடுகிறேன் பார்!' என்றார் அரசர்.

இராமன் எதிர்பார்த்த பயன் இதுதானே! மகிழாமல் இருப்பானா?

இன்னொரு முறை தெனாலிராமனே குற்றவாளியாகி விட்டான். அரசர் அவன்மேல் கடுஞ்சினங் கொண்டார். "இராமா, நீ செய்த குற்றத்திற்குத் தண்டனை சாவுதான்; அதில் இருந்து நீ எப்படியும் தப்பவே முடியாது. ஆனால் உனக்காக ஒரு வாய்ப்புத் தருகிறேன். சாகும் முறையை உன் விருப்பம்போல் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றார்.

"அரசே நான் கட்டாயம் சாகத்தான் வேண்டுமா?"

'ஆமாம்! அதைமாற்ற முடியாது; நீ செத்தேதான் ஆகவேண்டும்.'

"தாங்களே ஆணையிட்ட பிறகு, என்னால் என்ன செய்யமுடியும்? அரசே, நான் வயது முதிர்ந்து இயல்பாகச் சாக