உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

வேண்டும்; அதற்கு ஆணையிடுங்கள். தங்கள் ஆணைப்படி கட்டாயம் சாகிறேன்" என்றான்.

அரசர் வேறு ஒன்றும் சொல்ல மாட்டாதவராய்த் திகைத்துப் போனார். தெனாலிராமன் அறிவுத் திறமும் சொல்லாற்றலும் அரசரையும் அவையில் இருந்தவர்களையும் வியப்பில் ஆழ்த்தின. இத்தகைய சொல்லாற்றல் முல்லா வினிடமும் மல்கியிருந்தது. அதற்குச் சான்றாக விளங்குகிறது ஒரு கதை:

"முல்லா, நீர் அறிவாளி என்று பலரும் சொல்கிறார்கள்; நானும் நம்புகிறேன்; நீர் அறிவாளிதான் என்பதை இப்பொழுது இந்த அவையில் மெய்ப்பிக்க வேண்டும்" என்றார் அரசர்.

அரசே, நான் அறிவாளி என்று சொல்லிக் கொண்டது இல்லை. மற்றவர்கள் சொல்வதற்காக, நான் என்னை அறிவாளி என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமா?" என்றார் முல்லா.

'ஆம்; நீர் ஏதாவது மழுப்பித் தப்பித்துக் கொள்ள முடியாது. செய்தியைக் கேளும். நீர் சொல்வது உண்மையாக ருக்குமானால் உம் தலை வெட்டப்படும். நீர் சொல்வது பொய்யாக இருந்தால் உம்மைத் தூக்கில் போட்டுவிடுவேன். நீர் ஏதாவது சொல்லியாக வேண்டும்" என்றார் அரசர்.

முல்லா எண்ணினார்; உண்மையைச் சொல்லித் தலை வெட்டப்படுவதா? பொய்யைச் சொல்லித் தூக்கில் தொங்குவதா? இரண்டும் சொல்லாமல் உயிர்தப்புவது எப்படி?

முல்லாவின் சிந்தனை தெளிவாயிற்று. அரசே, நீர் என்னைத் தூக்கில் போடப் போகிறீர்" என்றார்.

அரசர் குழம்பினார்; அவையோர் திகைத்தனர். முல்லா தெளிவாக இருந்தார்.

முல்லாவின் உரைப்படி என்ன தண்டனை தருவது? முல்லா சொன்னது உண்மையாக இருந்தால், தலையை வெட்ட வேண்டும். பொய்யாக இருந்தால், தூக்கில்

போடவேண்டும்.

தலையை வெட்டினால் முல்லா சொன்னது பொய்யாகி விடும்; தூக்கில் போட்டால் மெய்யாகிவிடும்.

ஆதலால் முல்லா பொய் சொல்லியிருந்தால் தலையை வெட்டாமல் தூக்கில் போடவேண்டுமே; மெய் சொல்லி யிருந்தால் தூக்கில் போடாமல் தலையை வெட்டவேண்டுமே!