உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

137

நெப்போலியன் வாழ்வில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி போலவே முல்லாவின் கதை ஒன்றும் உள்ளது:

முல்லாவின் நண்பர் ஒருவர் ஒரு நாள் முல்லாவைப் பார்க்க வந்தார். அவர், "முல்லா, உங்களுக்கு நாட்டிலே நல்ல புகழ் இருக்கிறது; எங்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது; அரசரிடம் செல்வாக்கு இருக்கிறது; செல்வர்களும் மதிக்கிறார்கள்; அதிகாரிகள், அறிவாளிகள், பொதுமக்கள் ஆகிய எல்லா ரிடத்தும் உங்களுக்குப் பெருமை இருக்கிறது. இதன் காரணத்தைத் தாங்கள் சொன்னால் நானும் பயன் கொள்ளலாமே?" என்றார். நண்பரே, நான் அச் செய்தியை உமக்குச் சொன்னால் நீர் அதை எவரிடமும் சொல்ல மாட்டீரே!"

"கட்டாயம் சொல்லவே மாட்டேன்.

"சொல்லவே மாட்டீரா?

79

"மிகமிக உறுதியாகச் சொல்கிறேன்; எவரிடமும் நான் சொல்ல மாட்டேன்'

C4

'அப்படியா? மிக நல்லது! அதே கருத்து எனக்கும் உண்டு; நானும் உம்மைப்போலவே சொல்லாமல் காப்பாற்றுகிறேன் என்றார் முல்லா. நண்பர், முல்லாவினிடம் வெற்றிபெற மாட்டாமல் வந்த வழியே திரும்பினார்.

வாழ்வில் இருந்து கதைகள் பிறக்கின்றன; சில கதைகளோ வாழ்வாகவே இருக்கின்றன, இரண்டும் ஒன்றாகக் கைகோத்துச் செல்வது வியப்பாகவே அமைந்துவிடுகின்றது.

12. சூழ்ச்சிக்குச் சூழ்ச்சி

ரண்டு பேர் கூட்டாக கூட்டாக உழவுத் தொழில் நடத்தி னார்கள். அவர்களுள் சூழ்ச்சிக்காரன் ஒருவன்; வெள்ளை மனமுடையவன் இன்னொருவன். இரண்டு பேரும் வருமானத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதற்கு ஏற்றபடி திட்டம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர்.

சூழ்ச்சிக்காரன், "இந்தமுறை செய்யும் பயிரில் மேல் வருமானத்தை நீ எடுத்துக்கொள்; நான் கீழ் வருமானத்தை எடுத்துக் கொள்கிறேன்; அடுத்த பயிரில் நீ கீழ்வருமானத்தை எடுத்துக்கொள். நான் மேல் வருமானத்தை எடுத்துக் கொள்கிறேன்” என்றான்.மற்றவன் ஒப்புக் கொண்டான்.