உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ்வளம் -33

இந்த முறை 'நிலக்கடலை பயிரிடுவோம்' என்றான் சூழ்ச்சிக்காரன். நிலக்கடலையில் மேல் வருமானம் என்ன கிடைக்கும்? காய்ந்துபோன கொடிதானே கிடைக்கும்! கடலை நிலத்தினுள்ளேதானே இருக்கும்! ஆதலால், சூழ்ச்சிக்காரனுக் குக் கீழ் வருமானமான கடலை நிரம்பக் கிடைத்தது. வெள்ளையானவனுக்குப் பட்டுப் போன கொடியே கிடைத்தது.

சரி, போகட்டும்! அடுத்த பயிரிலாவது நாம் நன்மை பெறலாம் எனக் கருதியிருந்தான் வெள்ளையானவன்.

சூழ்ச்சிக்காரன் இந்த முறை நாம் கரும்பு பயிரிடுவோம் என்றான். நன்றாக உழுது உரம் போட்டுக் கரும்பு பயிரிட்டனர். கரும்பு சிறப்பாக வளர்ந்தது. நல்ல விலைக்குப் போகும்படியாக இருந்தது. சூழ்ச்சிக்காரன், "போனமுறை உனக்கு மேல் வருவாய், எனக்குக் கீழ் வருவாய். நான் கரும்பை வெட்டிக் கொள்கிறேன். அதற்குப் பின் அதன் அடிக்கட்டையை நீ வெட்டிக் கொள்" என்றான். முதல் முதலில் கொடியாவது கிடைத்தது. இப்பொழுது கரும்பின் அடித்தூரை வைத்து என்ன செய்வது? வெட்டி எறிய வேண்டிய வேலைதான் பயன்!

ஏமாறுபவர்கள்

இருக்குமளவும் ஏமாற்றுபவர்கள் ருக்கத்தான் செய்வார்கள் என்பதை விளக்கும் நம் நாட்டுக் கதை இது. முல்லாவின் கதை ஒன்றும் இவ்வாறே வழங்குகிறது! ஆனால் அது சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெற்றி கண்ட கதை.

முல்லாவுக்கு அரசர் நன்கொடையாகச் சில நிலங்களைத் தந்தார். முல்லாவுக்கு அரசர் நிலம் வழங்கியதை அறிந்த அதிகாரி ஒருவர் அந்த நிலங்களில் தமக்குப் பங்கு வேண்டும் என்று வேண்டினார். அரசர், இரண்டு பேரும் நிலத்தின் விளைவை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்.

அதிகாரிக்கு அரசரிடம் நல்ல செல்வாக்கு இருந்தது. நிலத்தில் விளையும் பயிரின் மேல் வருமானம் அதிகாரிக்குத் தர வேண்டும் என்றும், நிலத்தின் அடி வருமானத்தை முல்லா எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசனிடம் ஆணை பெற்றிருந்தார். அந்த ஆணையை முல்லா அறிந்து கொண்டார். அரசர் ஆணையை மீறி நடக்க முடியாதே!

முல்லா 'டர்னிப்பு' என்னும் கிழங்கினைப் பயிரிட்டார். அதிகாரி தம் பங்குக்கு உரிய வருமானத்தைப் பெறுதற்காக அரசர் ஆணையுடன் முல்லாவினிடம் வந்தார். டர்னிப்புப் பயிரைக் கண்டதும் அதிகாரி திகைத்துப் போனார். முல்லா