உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

139

அலுவலரிடம், "அரசர் ஆணைப்படி நீர் மேல் வருமானத்தை எடுத்துக்கொள்ள எனக்கு எந்தத் தடையும் இல்லை. எடுத்துக் கொள்ளும்" என்றார். அதிகாரிக்குப் பயனில்லாத வெறுந் தழையால் ஆவதென்ன? 'அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்'

எனப் போய்விட்டார்.

மறுமுறை அதிகாரி தம் பங்கைப் பெறுதற்காக வந்தார். இம்முறை கட்டாயம் அதிகாரி நிலத்தின் கீழ் வருமானம் தம்மைச் சேர வேண்டும் என்றே அரசரிடம் ஆணை பெற்றுக் கொண்டு வருவார் என்பது அவருக்குத் தெரியும். அதனால் கோதுமை பயிரிட்டிருந்தார். அதிகாரி முல்லா நினைத்தவாறே கீழ் வருமானத்தைப் பெற ஆணை பெற்றுக் கொண்டார்.

கோதுமையில் வருமானம் தட்டையின் மேலே தானே உண்டு! நிலத்திற்குள் எந்த வருமானமும் இல்லையே! அதிகாரி ரண்டாம் முறையும் ஏமாறினார். 'முல்லாவை வெல்வது முடியாது' என அதிகாரி தெளிவடைந்தார். அதனால், அதற்குப் பின் நிலத்தில் பங்கு கேட்பதை விட்டுவிட்டார்.

நன்கொடையாகப் பெற்ற ஒருவன் நிலத்தில் அதிகாரி வருமானம் கேட்க வேண்டியது இல்லை, அவர் சூழ்ச்சியால் அரசரிடம் ஆணை பெற்றார். சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வென்றார் முல்லா. 'முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்' என்பது நம் பழமொழி.

13. எதிரொலி

நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்தது. நீதிபதி ஓயாமல் "கழுதை கத்துகிறது; கழுதை கத்துகிறது” என்றார். கழுதை கத்துகிறது என்று சொல்வது அவர் அறியாமலே அவர் வாயில் அடிக்கடி வந்து கொண்டிருந்தது. அதனைக் கேட்டுக் குற்றக் கூண்டில் நின்ற சாட்சி வெறுப்படைந்தான்.

வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே, வெளியே ஒரு கழுதை கத்தியது. அதனைக் கேட்ட நீதிபதி,"அது என்ன குரல்?" என்றார். இயல்பாக வெறுப்படைந்திருந்த சாட்சி, "நீதிபதியவர்களின் எதிரொலிதான்" என்றான்.

இக் கதை ஒரு பழைய கதை. சாட்சி உரையைக் கழுதை கத்துவதாகக் கூறியதை, நீதிபதி உரைக்குத் திருப்பி விட்டு விட்டான் சாட்சி. மலைக்குமுன் நின்று என்ன சொல்கிறோமோ