உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

ஓ இளங்குமரனார் தமிழ்வளம் -33

அதைத் திரும்பி எதிரொலியாகத் தருமல்லவா அது, அதனைப் போலவே சிலரைப் பழிப்பதற்காகக் கூறிய உரையைக் கூறியவர்க்கே பழிப்பு ஏற்படுமாறு திருப்பிவிடும் திறமையாளர்கள் உலகில் பலர்.

அறிஞர் பெர்னாட்சாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் 'முட்டாள்' என்று மட்டுமே எழுதியிருந்தது. அதனைக் கண்ட நண்பர் ஒருவர் "அறிஞர் அவர்களே, உங்களை உலகம் 'மேதை' எனப் பாராட்டுகிறது. இவனோ 'முட்டாள்' என்று உங்களை எழுதியுள்ளான்" என்றார். அதனைக் கேட்ட சா,"அன்பரே எனக்குப் பலர் கடிதம் எழுதிக் கையெழுத்துப்போட மறந்து விட்டிருக்கின்றனர். இவனோ கையெழுத்தை மட்டும் போட்டு விட்டுக் கடிதம் எழுத மறந்து போயிருக்கிறான்" என்றார். அறிஞரின் மூளைக் கூர்மை அருமையாக 'வரிசையை' மாற்றிவிட்ட தல்லவா!

இப்படி முல்லா கதை யொன்று வழங்குகின்றது:

ஓர் அறிஞர் முல்லாவை அவர் வீட்டில் வந்து காண்பதற்காக ஒரு நேரத்தைக் குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட பொழுதில் முல்லாவின் வீட்டிற்கு அவர் வந்தார். ஆனால் அந்தப் பொழுதில் முல்லா வீட்டில் ல்லாமல் வெளியே போய்விட்டார்.

வீடு தேடி வந்து முல்லாவைக் காணாத அறிஞர்க்கு எரிச்சலாக இருந்தது. "வரச் சொல்லி நேரங்குறித்து வைத்து விட்டு வெளியே போய்விட்டார் எப்படி?வெட்டியாக அலைய வைத்துவிட்டாரே முல்லா!" எனப் பல எண்ணினார். அங்குக் கிடந்த மாக்கட்டி ஒன்றை எடுத்து 'முட்டாள் கழுதை' என்று முல்லாவின் வீட்டுக் கதவிலே எழுதிவிட்டுப் போய்விட்டார்.

முல்லா, வீட்டுக்குத் திரும்பினார். அவரை அவர் வீட்டுக் கதவு பெருமையாக வரவேற்றது 'முட்டாள் கழுதை!' முல்லா நகைத்துக்கொண்டார். 'முட்டாள் கழுதையா! சரி சரி ; தேடி வந்த அறிஞர்தாம் இப்படி எழுதியிருக்கிறார்' என்று தெரிந்தார். நேரே அவரைத் தேடிப்போனார்.

முல்லா வரும் விரைவைக் கண்ட அறிஞர், "இப்பொழுது முல்லா நன்றாகத் திட்டப் போகிறார்; வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான்; 'முட்டாள் கழுதை' என்று கதவிலேயே எழுதித் திட்டிவிட்டு வந்தால் எவராவது விட்டுவைப்பாரா? என்று அஞ்சிக் கொண்டிருந்தார்.