உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

15. விண்மீன்கள் எத்தனை?

"அறிஞரே, இந்த உலகைச் சுற்றிவர எத்தனை நாளாகும்?" என்று அரசர் கேட்டார்.

அறிஞர்க்குப் புலப்படவில்லை. "நாளைக்குச் சொல் கிறேன்" என்று அரசரிடம் விடைபெற்றுக் கொண்டு

போய்விட்டார்.

அறிஞர் கவலையுடன் ஒரு காட்டின் வழியே நடந்து கொண்டிருந்தார். 'அரசர் வினாவுக்கு நாளைக்கு எப்படிப் பதில் சொல்லித் தம் பெயரைக் காப்பாற்றுவது' என்னும் கவலை அவரை வாட்டியது.

அறிஞர் கவலையுடன் போவதை, ஆடு மேய்ப்பவன் ஒருவன் கண்டான். "அறிஞரே, ஏன் இவ்வளவு கவலைப் படுகிறீர்கள்? மனத்தில் உள்ள கவலையை மற்றவர்களிடம் சொன்னால் ஆறுமே!" என்றான்.

'ஆடு மேய்க்கும் இவன் என்ன அவ்வளவு அறிவாளியா? அரசர் வினாவுக்கு என்னாலேயே மறுமொழி சொல்ல முடிய வில்லையே! இவனா சொல்லிவிடுவான்!' என நினைத்தார். அதற்குள், ஆடு மேய்ப்பவன், "இவனோடு என்ன பேச்சு எனத் திகைக்கிறீரா? 'எல்லாம் தெரிந்தவரும் இல்லை; எதுவும் தெரியாதவரும் இல்லை! என்பது உமக்குத் தெரியாதா?" என்றான்.

ஆடு மேய்ப்பவன் அறிவாளி என்பதை உணர்ந்து, நிகழ்ந்ததைச் சொன்னார். அவன், "இது து என்ன அப்படி யொன்றும் கடினமான கேள்வி இல்லையே! கதிரோன் புறப்படும்போது அரசர் தயாராக இருந்து ஒரு குதிரையில் புறப்பட வேண்டும். கதிரோன் போகும் போக்கில் அதே விரைவில் போக வேண்டும். மறுநாள் விடியும் போது உலகைச் சுற்றிவிடலாம்; இவ்வளவு தானே!" என்றான்.

“அரசர் அந்த விரைவில் போகமுடியாது என்றால் என்ன சொல்வது?" என்றார் அறிஞர்.

"கதிரோன் போகும் விரைவில் பாதி போக முடியும் என்றால் இரண்டுநாள் ஆகும்; விரைவில் கால் பங்கே போக முடியும் என்றால் நான்குநாள்; இப்படிக் கணக்குப் போட்டுக் கொள்ள வேண்டியது தானே!" என்றான் ஆயன்.அறிஞர், ஆயனின் அறிவைக் கண்டு வியந்தார். அரசரிடம் சென்று இந்த