உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

கடமை; அது சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்வது தங்கள் கடமை" என்று சொல்லிக் கொண்டு போய்விட்டார் ஆசிரியர்.

இப்படி ஒரு கதை. முல்லாவின் கதைகளிலும் இப்படிக் கதையுண்டு.

முல்லாவின் அறிவு பற்றிய புகழ் எங்கும் பரவியிருப்பதைக் கண்டு பொறாமை கொண்டார் ஓர் அறிஞர். அவர் முல்லாவை மடக்கிவிட வேண்டும் என நினைத்தார். அதனால் முல்லா இருக்கும் ஊருக்கு வந்தார். முல்லாவினிடம் தாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றும், பதில் சொல்லவில்லையானால் அவர் தோற்றுப் போனதாக முடிவு என்றும், அதன் பிறகு எங்கும் அவர் தம்மை அறிவாளி என்று சொல்லிக் கொள்ளக்கூடாது. எவரும் அவரை அறிவாளி என்று சொல்லவும் கூடாது என்றும் ஒப்பந்தம் பேசிக் கொண்டனர்.

அறிஞர் முதல் கேள்வியை முல்லாவினிடம் கேட்டார். "முல்லா, உலகின் மையமான இடம் எது"?

முல்லா அறிஞர் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு தம் கழுதை கட்டியிருந்த இடத்தைச் சுட்டிக் காட்டி, 'இந்த இடம்தான்' என்றார். “உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அளந்து பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.

வானத்தில் எத்தனை விண்மீன்கள் இருக்கின்றன? என்று மீண்டும் வினாவினர் அறிஞர்.

முல்லா சிறிதும் திகைக்காமல், "இந்தக் கழுதையின் உடலில் எத்தனை மயிர்கள் இருக்கின்றனவோ அத்தனை விண்மீன்கள் இருக்கின்றன. நம்பிக்கை இல்லையானால் எண்ணிப் பாருங்கள் என்றார்.

மூன்றாம் கேள்வியொன்றை அறிஞர் முல்லாவினிடம் கேட்டார். "வாழ்வியல் நெறிகளாக சமயங்களாகச் சான்றோர்கள் எத்தனை காட்டியுள்ளனர்?" என்றார்.

"இதுதானே! மிகத் தெளிவானதாயிற்றே. உங்கள் தாடியில் எத்தனை மயிர்கள் உண்டோ அத்தனை நெறிகள். உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் ஒவ்வொரு மயிராகப் பிடுங்கி எண்ணிக் காட்டட்டுமா?" என்றார் முல்லா.

வேண்டா! வேண்டா! எனக்கு நம்பிக்கைதான். நீர் அறிஞர் என்பதையும் நம்புகிறேன்" என்று சொல்லி, 'விட்டால்