உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

145

போதும்' எனத் தப்பித்துப் போனார்! முல்லா நகைத்தார். ஊர்க்காரர்கள் முல்லாவின் பெருமையை முன்னிலும் நன்றாக அறிந்து கொண்டனர்.

16. வேண்டாத விருந்து

ருந்தாளி ஒருவர் வந்தார். வேண்டா விருப்புடன் வரவேற்றார் வீட்டுக்காரர். சாப்பிட வைக்க வேண்டும் என்பது அவர் எண்ணமில்லை. அதனால் "நீங்கள் எங்கள் வீட்டில் சாப்பிடுவீர்களா?" என்றார்.

விருந்துக்கு வந்தவர் வீட்டுக்காரர் விருந்து வைக்காமல் ஓட்டி விடுவார் போலிருக்கிறதே என்று எண்ணி, “நீங்கள் சாப்பிடாமல் போகவிட மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்" என்றார்.

வீட்டுக்காரர் இவர் தெளிந்த ஆளாக இருக்கிறார்; விடக்கூடாது என்று நினைத்து, "அப்படியே சாப்பிட்டாலும் குழந்தைகள் கையில் இரண்டு ரூபா தராமலா போய்விடு வீர்கள்?' என்று சாப்பாட்டுக் காசை வாங்கும் திட்டத்தில் கூறினார்.

ராக

விருந்தாளியோ இதற்கெல்லாம் அகப்பட்டுக் கொள்பவ இல்லை. அப்படியே குழந்தைகள் கையில் நான் இரண்டு ரூபா தந்தாலும் நீங்கள் என்னை வழியனுப்பும்போது வழிச் செலவுக்கு நான்கு ரூபாயாவது தராமலா விடுவீர்கள்" என்றார். ஒருவருக்கு ஒருவர் தேர்ந்த கட்டைகள் இவர்கள்.

இன்னொரு வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தான். சாப்பிடுவதற்கு உரிய சரியான வேளையில் வந்து விட்டான். அவனைத் திண்ணையிலே உட்கார வைத்துவிட்டு, வீட்டுக்குள் போனான் வீட்டுக்காரன்.

மனைவியை அழைத்து விருந்தாளி வந்துள்ள செய்தியைச் சொன்னான். அவளும் அவனும் கூடிப்பேசி ஒரு சிறு நாடகம் நடத்தினர்.

று

கணவன் மனைவியை அடித்தான்; அடி அடி என்று அடிப்பது வெளியே கேட்டது. ஆனால் அவனோ முறத்தை எடுத்துக் கொண்டு முதுகில் அடிப்பதுபோல் அடித்தான். அவளோ உண்மையாகவே அடிபட்டது போல 'ஓ' என்று அழுது ஒப்பாரியே வைத்துவிட்டாள். இந்த நாடகம் நடந்து