உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

கொண்டிருக்கும்போதே திண்ணையில் இருந்த விருந்தாளி இருக்கிறானா எனப் பார்த்தான் வீட்டுக்காரன்.

நம்

விருந்தாளியைத் திண்ணையில் காணவில்லை. சண்டையைப் பார்த்து 'நல்ல வேளையில்லை' என்று போய் விட்டான். 'நமக்கு நல்ல வேளை' என்று சொல்லி உண்ணத் தொடங்கினர்.

அப்பொழுது தாங்கள் நடித்த நாடகத்தைப் பற்றிப் பேசினர். 'நான் நோகாமல் அடித்தேனே' என்றான் அவன். 'நான் ஓயாமல் அழுதேனே' என்றாள் அவள். அப்பொழுது விருந்தாளி, 'நான் போகாமல் இருந்தேனே' என்று வந்து சாப்பாட்டில் உட்கார்ந்தான்.

இப்படிக் கதைகள் பலப்பல வழங்குகின்றன நம் நாட்டில். முல்லா கதையொன்றும் இப்படியிருக்கின்றது;

முல்லா ஒருமுறை தாம் விருந்தோம்பும் சிறப்பைத் தாமே பாராட்டிக் கொண்டார். தம் மனைவி விருந்தாளிக்கும் சிறப்பையும் விரித்துரைத்தார். இதனைக் கேட்ட சிலர் ஒருநாள் முல்லாவின் வீட்டுக்கு வந்துவிட்டனர்.

ஒரே நேரத்தில் நான்கு பேர்கள் இப்படி வந்து வாட்டு வார்கள் என்று முல்லா கருதவில்லை. அவர்களைப் பார்த்து "ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு விருந்து வைக்க முடியுமா? நீங்கள் இங்கே இருங்கள். நான் போய் வீட்டில் வேண்டிய ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன் என்று அவர்களை ஓரிடத்தில் நிறுத்தி விட்டுப் போனார்.

போனவர் போனவர்தாம். திரும்பவே இல்லை. விருந்துக்கு வந்தவர்கள் முல்லாவைத் தேடிச் சென்றனர் 'முல்லா! முல்ல!' என்றனர். அவர் ஆளையே காணோம். அவர் மனைவி வந்தார். 'அவர் அப்பொழுதே வெளியே போய்விட்டாரே' என்றார்.

(C

'என்ன சொல்கிறீர்கள். நாங்கள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். அவர் முன் வாயில்வழி போகவே இல்லையே" என்றார்கள். அவர்கள் அவர் சொல்லை நம்பிப் போவதாகத் தெரியவில்லை. முல்லா உள்ளேயிருந்து கொண்டே "முன்வாசல் வழி போகா விட்டால் என்ன? கொல்லை வழி போயிருக்கலாமே" என்றார்.

பெருமைக்காகப் பேசிவிட்டுத் தப்பிக்கிறார் முல்லா என்பதை அறிந்து கொண்டு அவர்கள் திரும்பினர்.