உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

17. அரசர் சொன்ன தென்ன?

147

சிறுவன் ஒருவன் ஓடோடி வந்தான். "அரசர் என்னோடு பேசினார்; அரசர் என்னோடு பேசினார் என்று வழியில் கண்டவர்களிடமெல்லாம் கத்திக் கத்திக் கூறினான். “அரசர்க்கு இந்தச் சிறுவன் மேல் அவ்வளவு அன்பா! இந்தச் சிறுவன் பேறு பெற்றவன்தான் எனப் பலரும் பேசிக் கொண்டனர். ஊர்ப் பெரியவர்களிடம் கூடத் தலையாட்டி விட்டுப் போகும் அரசர் சிறுவனிடம் பேசினார் என்றால் ஊரார்க்கு வியப்பாக இராதா?

அரசர் என்னோடு பேசினார் என்ற சிறுவனிடம் ஒருவன், 'அரசர் என்ன பேசினார்?' எனக் கேட்டான்.

அரசர் குதிரைமேல் வந்தார்; குதிரை வரும் வழியில் நான் குறுக்கே நின்று விளையாடிக் கொண்டிருந்தேன். குதிரையைப் பார்த்தும்கூட விலகிப் போகாமல் விளையாடினேன். அரசர் தம் சாட்டையை எடுத்து வீசி, "அடே அப்பால் போ என்றார்" என்றான்.

'அரசர் பேசியது இதுதானா!' என்று வியப்படைந்தான் கேட்டவன். இதுபோல் முல்லா கதையொன்றும் அரசர் பேசிய பெருமை பேசுகின்றது.

முல்லா அரசரைக் காண்பதற்காக அரண்மனைக்குச் சென்றார். அரசரைக் கண்டு பேசி விட்டுத் திரும்பினார்.

முல்லா ஊருக்கு வந்ததும் ஊர்ப் பெரியவர்களும் ளைஞர்களும் சூழ்ந்து கொண்டார்கள். "முல்லா, அரண் மனைக்குப் போனீரா, அரசரைப் பார்த்தீரா? அரசரிடம் பேசினீரா?" எனப் பலவாறாகப் பலரும் வினவினர்.

முல்லா பெருமையாகப் பேசினார்; “நான் தடையில்லாமல் அரண்மனைக்குள் போனேன்; நேரே அரசரைக் கண்டேன்; பல ஊர்களில் இருந்தும் பலப்பல பெரியவர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் கூறியவற்றையெல்லாம் அரசர் தலையசைத்துக் கேட்டார். கையமர்த்தி நிறுத்தினார். வாய் திறந்து ஒரு சொல்லும் சொல்லவில்லை. நான் பேசினேன். அரசர் அப்பொழுது மட்டும் வாய் திறந்து பேசினார்" என்று கூறினார். அதற்குமேல் முல்லா கூறவில்லை! நிறுத்திக் கொண்டு கூடியிருந்தவர்களை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டார்.