உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ்வளம் -33

கூட்டத்தில் இருந்தவர்களுள் ஒருவர், “அரசர் உம்மிடம் அப்படி என்ன கூறினார்?" என்றார்.

மீண்டும் ஒரு முறை அனைவரையும் பார்த்தார் முல்லா. ஏதோ அருமையான செய்தியைத்தான் அரசர் கூறியிருக்க வேண்டும் என எண்ணிய கூட்டத்தினர் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டனர்.

"முட்டாளே! வாயை மூடு" என்றார் அரசர். இது தான் அரசர் என்னிடம் பேசியது என்றார் முல்லா. அனைவரும் சிரித்தனர். அரசர் பேசியது அருமையான பெருமையான பேச்சல்லவா!

18. சந்திரன் அரி

பொய்கூறாமை புகழ்மிக்க பண்பாடு. 'வாய்மையே வெல்லும்' என்பது நம் நாட்டுக் குறிக்கோள் மொழி.

என

அரிச்சந்திரன் என்னும் வேந்தன் 'உண்மைக்கு ஒருவன்' வாழ்ந்தான். உண்மையைக் காப்பாற்றுவதற்காகவே நாட்டை இழந்தான்; நகரை இழந்தான்; மனைவியைப் பிரிந்தான்; மகனை இழந்தான். ஆனால், கடைசிவரை வாய்மையை மட்டும் இழக்கவில்லை.

வாய்மை போற்றிய அரிச்சந்திரன் நாடகத்தை மிக இளமையிலே காந்தியடிகள் பார்த்தார். "அரிச்சந்திரனைப் போலவே நான் வாய்மை காப்பேன்" என உறுதி கொண்டார். அப்படியே வாழ்ந்தார். தம் வாழ்க்கை வரலாற்றைச் 'சத்திய சோதனை' என்னும் பெயராலேயே எழுதினார்.

அரிச்சந்திரன் பிறந்த நாட்டிலே அவனுக்கு நேர்மாறாக ஒருவன் இருந்தான். பெயரையும் நேர் மாறாகவே வைத்துக் கொண்டான். அவன் பெயர் 'சந்திரன் அரி' என்பது! அவன் ஒரே ஒரு கொள்கையைக் கடைப்பிடித்தான். எக்காரணம் கொண்டும் எதற்காகவும் எந்நிலைமையிலும் ஓர் உண்மையும் சொல்வதில்லை என்பது அது. அவனைப் பற்றிய கதை வில்லடிப்பாட்டாக வெளிப்பட்டது.

முல்லாவின் கதையிலும் வாய்மைக்கதை ஒன்றுண்டு.

முல்லாவைப் பார்க்க, பெரியவர் ஒருவர் வந்தார். "முல்லா, உண்மை என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள நான் மிக விரும்புகிறேன். உண்மை என்பதற்கு விளக்கம் பலரும் பலவகையாகக் கூறுகின்றனர். ஒருவருக்கு ஒருவர் முற்றிலும் முரணாகக் கூடச் சொல்கின்றனர். உண்மை என்பதற்கு நீர் என்ன விளக்கம் சொல்கிறீர்? என்றார்.