உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

செல்லும் வழியில் ஓரிடத்தில் தண்ணீர்க் குழாய் இருந்தது. தண்ணீர்க்குழாயில் ஓர் அடைப்பு இருந்தது. அடைப்பை வலிந்து இழுத்துத் திறந்தார் முல்லா. 'சரேல்' என்று நீர் பாய்ந்து வெளிப்பட்டது. முல்லாவின் முகம் தலையெல்லாம் நனைந்தன. சட்டை துணியெல்லாம் தண்ணீராயிற்று. எப்படியோ தண்ணீரைக் குடித்து வேட்கையைத் தணித்துக் கொண்டார். வேட்கை தணிந்ததும் தண்ணீர்தானே நின்று விடுமா?

"தண்ணீரே உனக்குச் சிறிதேனும் அடக்கம் இல்லையே! எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்னும் அறிவுதானும் இல்லையே! உன் வெறித்தனத்தைப் பார்த்துத்தானே மூச்சுப் போகவிடாமல் குழாய்க்குள் அழுத்தி வைத்திருக்கிறார்கள். 'இரு இரு' உன்னை அடக்குகிறேன்" என்று அடைப்பை வைத்து இறுக்கி மூடினார். தண்ணீர் நின்றது.

வளர்ந்தவர்களும் குழந்தைத் தனமாக இருப்பதுண்டு என்பதை விளக்குகிறது முல்லாவின் இக்கதை.

20. அவரவர் அறிவு

விசயநகர வேந்தர் கிருட்டிணதேவராயர் அவைக்கு ஒரு நாள் ஓர் அறிஞர் வந்தார். அவர், 'எம் குறிப்பை அறிந்து மறுமொழி குறிப்பாலேயே கூறவேண்டும்; அத்தகு திறமையாளர் இந்த அவையில் இருக்கின்றனரா? என்றார்.

வேந்தர் தெனாலிராமலை நோக்கினார். இராமன் அவையின் முன் வந்தான்.

வெளியூர் அறிஞர் தம் வலக்கையைத் தூக்கி ஒரு விரலை நீட்டினார். தெனாலிராமன் இரண்டு விரலை நீட்டினான். அவர் மூன்று விரலை நீட்டினார். இராமன் நான்கு விரலை நீட்டினான். அவர் ஐந்து விரல்களையும் நீட்டினார். இராமன் விரல்களையெல்லாம் மடக்கிக் கை முட்டியை முன்னே நீட்டிக் காட்டினான். வந்தவர் "நான் தோற்றேன் தோற்றேன்" என்று கூறினார்.

அரசர், "நீர் என்ன கூறினீர் அவர் என்ன கூறினார்" என வினாவினார்.

"அரசே! நான் இறைவன் ஒருவன் என்றேன். அவர் ஏன், அம்மையப்பன் என இறைவர் இருவர் அல்லரோ" என்றார்.

"நான் படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய்யும் முக் கடவுளர் உண்டே" என்றேன்.