உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

151

"அவர், ஏன்? நான்கு வேதங்கள் இல்லையோ" என்றார். "நான் ஐம்பெரும் பூதங்கள் உண்டே" என்றேன்.

"பூதங்கள் என்ன செய்யும்? அவற்றை ஒரேயடியாகத் தொலைக்க முருகன் கைவேலுண்டே" என்றார் என்று கூறினார்.

அவர் போனபின் தெனாலிராமனைப் பார்த்து "அவருக்கு நீ என்ன சொன்னாய்?" என்றார் அரசர்.

,

அவர் செருக்குக் கொண்டவர். ஆணவம் தலைக்கு ஏறி அரசர் அவை என்பதையும் கூட எண்ணாமல், 'ஓர் அறை அறைவேன்' என்றான். நான் விடுவேனா? வெளியூர்க்காரன் சலசலப்புக்கு உள்ளூர்க்காரனாகிய நான் அஞ்சுவேனா? 'உன்னை இரண்டு அறை அறைவேன்' என்றேன். அவன் திமிரோடு, 'மூன்று அறை அறைவேன்' என்றான். 'தடியா உன்னை நான் நான்கு அறை அறையாமல் விடப் போவதில்லை' என்றேன். அவனோ அஞ்சவில்லை; 'உன்னை ஐந்து போடு போடுகிறேன் பார்' என்றான். நான் பொறுத்துக்கொள்வேனா? 'நீ ஐந்துபோடு போட நான் பார்த்துக் கொண்டா இருப்பேன்? என் கைம்முட்டியால் உன் மூக்கை உடைப்பேன்' என்றேன். தோற்றுப்போனேன் என்று போய்விட்டான் என்றான்.

இப்படியே இன்னும் சில கதைகளும் செய்திகளும் நம் நாட்டில் வழங்குகின்றன. முல்லாவின் கதையொன்றும் இம் முறையில் விளங்குகின்றது.

அறிஞர் ஒருவர் முல்லாவை ஒரு முறை கண்டார். முல்லா பெற்றிருக்கும் மெய்ப் பொருள் திறத்தை அறிந்து கொள்ள விரும்பினார். அதனால் தம் ஒரு விரலை வானை நோக்கி நீட்டினார். அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட முல்லா, தம் பையில் இருந்து ஒரு கயிற்றை எடுத்துக்காட்டி வானை நோக்கினார். முல்லா சொல்லுவது என்ன என்பது அறிஞர்க்குப் புரிந்து விட்டது. அதனால் முல்லாவைப் பாராட்டிச் சென்றார்.

ஒருவர் ஒற்றை விரலைக் காட்டியதையும் அதற்குப் பதிலாக முல்லா கயிற்றைக் காட்டி வானத்தைப் பார்த்ததையும் அதனை அவர் பாராட்டிவிட்டுப் போனதையும் - ஒருவன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

'உன்னை ஒரு கை பார்க்கிறேன்' என்று கூறியதாகவும், அதற்குப் பதிலாக, 'நீ பார்த்தால் நான் விடுவேனா? உன்னைக்