உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ்வளம் -33

கயிற்றில் தொங்கவிட்டு விடுவேன்' என்று பதில் சொன்னதாகவும் எண்ணினான். அதனால் தான் விரலைக் காட்டியவர் தோற்றுப் போனார் என்று முடிவு செய்தான்.

முல்லாவினிடம் அவர் என்ன சொன்னார், நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள், என்று கேட்டான்.

'உலகை மெய்யான ஆற்றல் ஒன்றே நடத்தி வருகின்றது; அவ்வாற்றல் இறைவன் என்பதே" என்பதை ஒரு விரலால் குறித்தார் அறிஞர்.

66

"அந்த இறைவனை அடைவதற்குப் பொய்யான வழிகளை மாந்தர் பலரும் பின்பற்றுகின்றனர். அப்படிப் பின்பற்றுவது இந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அதன் வழியாக வானத்தை அடைந்து விடுவேன் என்பது போலாகும்" என்று நான் விளக்கினேன். மிகச் சரி என்று ஏற்றுக் கொண்டார் அறிஞர் என்றார் முல்லா.

ஒரே குறிப்பு அறிவாளிக்குத் தரும் பொருள் வேறு; முட்டாளுக்குத் தரும் பொருள் வேறு என்பது இவற்றால் விளங்கும்.

21. கூலி வாங்காமலேயே வேலை செய்தவர்

ஊரெல்லாம் 'கள்வர் பயம்;” 'களவு' என்ற பேச்சாகவே இருந்தது. தெனாலிராமனுக்கும் கள்வரைப் பற்றிய பேச்சு எட்டியது. ஒரு நாள் இரவில் தெனாலிராமன் வீட்டுக்கும் கள்வர்கள் வந்துவிட்டனர். அவர்கள் கொல்லைப் புறத்தில் பதுங்கியிருப்பதைத் தெனாலிராமன் தெரிந்து கொண்டான். இராமன், உறங்கிக் கொண்டிருந்த மனைவியை எழுப்பினான். அடியே, ஊரெல்லாம் கள்வர் பயத்தால் பொட்டுப் பொட்டென்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள்! நீ இப்படிக் குறட்டை போட்டு உறங்குகிறோயே! எழுந்திரு; நம் வெள்ளிப் பாத்திரம் பணப்பெட்டி எல்லாவற்றையும் நம் கிணற்றுள் கொண்டுபோய்ப் போட்டுவிடலாம். கள்வர் பயம் நீங்கியபின்னால் எடுத்துக் கொள்ளலாம்" என்றான். அவன் மனைவி அவன் திறமையை அறிவாள் அல்லவா! ஏதேனும் காரணம் இருக்கும் என்று அவன் சொன்னபடியே

கேட்டுக்கொண்டாள்.

இராமனும் அவன் மனைவியும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டுபோய் ஒரு பெட்டியைக் கிணற்றுள் போட்டனர்.