உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

153

கொல்லைப்புறத்தில் மறைந்திருந்த திருடர்கள் இராமன் வீட்டில் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். கிணற்றில் பெட்டியைப் போட்டதையும் பார்த்தனர். அதனால் மெல்ல நகர்ந்து கிணற்றுக்குச் சென்றனர்.

கி ணற்றில் துலா (நீர் இறைக்கும் ஏற்றம்) மாட்டப் பெற்றிருந்தது. துலாவை இறைத்து நீரை வற்றவைத்துவிட்டால் பெட்டியை எளிதாக எடுத்துக் கொள்ளலாமே எனத் திட்ட மிட்டனர். விரைந்து விரைந்து துலாவால் நீரை இறைத்தனர்.

கிணறு ஆழமானது; நீர்ப்பெருக்குடையது; கள்வர்கள் விடியும் அளவும் நீரை இறைத்துக் கொண்டே இருந்தனர். அப்படி இறைத்தும் நீர் வற்றிய பாடில்லை; அந்நிலையில் ராமன் கள்வர்க்குத் தெரியாமல் தோட்டத்துள் புகுந்து அத்தண்ணீரைத் தோட்டத்திற்குப் பாய்ச்சினான். நெடுநேரம் இறைத்ததனால் தோட்டம் முழுவதும் பாய்ந்து விட்டது; பொழுதும் விடியும் அளவு ஆய்விட்டது; "இறைத்தது போதும்" என்றான் இராமன்; திருடர்கள் திகைத்துப் ஓட்டமெடுத்தனர். இராமன் தோட்டம் முழுவதும் நீர்பாய்ச்சிய மகிழ்ச்சியில் வீடு சென்றான்.

போய்

தெனாலிராமன் கதைகளுள் ஒன்று. இது திருட வந்தவர் களின் உழைப்பையே நயமாகத் திருடிக் கொண்ட இராமன் திறம் இது. முல்லாவின் திறமும் இத்தகையதாக விளங்குகின்றது.

முல்லாவின் மனைவியார் வெளியூர்க்குப் போயிருந்தார். சில நாட்களாக வீட்டின் கதவு பூட்டப்பட்டுக் கிடந்தது. ஒவ்வொரு நாளும் பொருள்கள் திருடுபோய்க்கொண்டே இருந்தன. முல்லா, ஒரு நாள் வீட்டில் பக்கத்தில் மறைந்திருந்தார். அரைகுறையாக இருப்பவற்றை யெல்லாம் திருடிக்கொண்டு போவதற்காகப் பழைய திருடன் வந்தான். அகப்பட்ட பொருள் களையெல்லாம் எடுத்து மூட்டையாகக் கட்டிக்கொண்டு புறப்பட்டான்.

முல்லா திருடனைத் தொடர்ந்தார். நெருங்கவும் செய்யாமல், அகலவும் செய்யாமல் தொடர்ந்தார். திருடன் தன் வீட்டுக்குள் நுழைவது வரை தொடர்ந்தார். வீட்டுக்குள்போன திருடன் பொருள்களை வீட்டில் பரப்பி வைத்துவிட்டு ஓய்வெடுத்தான். முல்லாவும் அவ்வீட்டுக்குள் மெல்ல நுழைந்தார். ஆங்கிருந்த விரிப்பை எடுத்துப் போட்டுக்கொண்டு படுத்துவிட்டார்.

திருடன் தன் வீட்டில் புதிய ஆள் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டு வியப்படைந்தான். தன் வீடுபோல் உரிமையாகப்