உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

படுத்திருக்க இவனுக்கு என்ன துணிவு இருக்கவேண்டும்? என நினைத்தான்.

"ஐயா நீர் யார்?" என்றான்.

"என் பெயர் முல்லா! நான் இந்த வீட்டில் இப்பொழுது குடியேறியிருக்கிறேன்.”

66

"இந்த வீடு என்வீடு! இதில் நீர் எப்படிக் குடியேறினீர்."

"என் வீட்டுப்பொருள்கள் எல்லாம் இங்கே இருக்கின்றன. அவ்வளவையும் நீ கொண்டுவந்து குவித்துவிட்டாய்; நான் மட்டும் அங்கே இருந்து ஆவது என்ன? என்று இங்கேயே குடியேறிவிட்டேன். இதற்கு வாடகை எவ்வளவு தரவேண்டும்; பொருள்களை யெல்லாம் நீ கொண்டு வந்து சேர்த்ததற்குக் கூலி எவ்வளவு தர வேண்டும்" என்றார்.

திருடன் உண்மையை உணர்ந்து கொண்டான். கொண்டு வந்த பொருள்களை யெல்லாம் கட்டுக்கட்டாகக் கட்டி மீண்டும் அவர் வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தான். முல்லா நன்றி சொல்லிவிட்டுத் தம் வீட்டுக்கு நடந்தார். வரும்போது மறைந்து மறைந்து வந்ததுபோல் இல்லாமல், நேராகவே சாலையில் நடந்து சென்றார்.

திருடர்களே தேர்ந்தவர்கள்! அவர்களிலும் தேர்ந்திருந் தால்தானே திருடர்களையும் ஏமாற்ற முடியும். திருடுவதற்கு மட்டுமில்லை; திருடப் போகாமல் காப்பதற்கும் தேர்ச்சி வேண்டியதிருக்கிறதே!

22. பரிசும் பாராட்டும்

போர்க்களத்திலிருந்து திரும்பி வந்த வீரர்களில் ஒவ்வொரு வீரனைப் பார்த்தும், "நீ பகை வீரர்களை என்ன செய்தாய்? என்று கேட்டுக் கொண்டு வந்தார் இளவரசியார்.

"என் கைவிரல்களை மடக்கியே பகைவன் கன்னத்தில் குத்திக் கொன்றேன். கருவி எதுவும் இல்லாத நிலையில் என் கையையே கருவியாக்கிச் செய்த செயல் இது" என்றான் ஒருவன். இளவரசியார் அவன் கையைப் பற்றி முத்தம் தந்து பாராட்டினார்.

வீரன் சொல்லையும் இளவரசியார் செயலையும் கண்ட இன்னொருவன், முன் வந்தான். "இளவரசியாரே, நானும் என் பகைவனைக் கருவி எதுவும் இல்லாத நிலைமையில் பல்லால் கடித்தே கொன்றேன்" என்றான். அவன் தன் வாயில் இளவரசி யார் முத்தமிடுவார் என எண்ணிச் சொல்கிறான் என்பதை