உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

155

அறிந்து கொண்டார் இளவரசியார். அதனால், 'அப்படியா வா' என்று அருகே அழைத்தார். மிக மகிழ்வுடன் அவன் அரசியார் முன் வந்து நின்றான். 'பளார்' என்று ஓர் அறை அறைந்து "இதுதான் உனக்குப் பரிசு ஓடு" என்றார் இளவரசி யார். இது பிரான்சு நாட்டில் நிகழ்ந்தது.

அரசர் வீரர்களைத் தனித்தனியே அழைத்து அவரவர் வீரத்திற்குத் தக்க பரிசும் பாராட்டும் வழங்கிக் கொண்டிருந்தார். ஒரே ஒரு வீரன் மட்டும் மிகக் கவலையுடன் ஒதுங்கி நின்றான். அரசர் அவனை அழைத்து "ஏன் இப்படிக் கவலையுடன் நிற்கிறாய்?" என்று வினவினார்.

எவரெவருக்கோ பரிசுகள் வழங்குகிறீர்கள்? என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை நீங்கள்" என்றான்.

"நீ என்ன திறங்காட்டினாய்" என்றார் அரசர்.

நானா? பாசறையில் காவல் காத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது பகைவீரன் ஒருவன் பாசறையை நோக்கி நிலத்தில் கால்கள் படபட என அடிக்க நகர்ந்து கொண்டிருந்தான். அவனை விட்டிருந்தால் பாசறைக்கு அழிவு ஏற்பட்டிருக்கும். வீரர்கள் எல்லாம் அழிந்திருப்பார்கள். ஆதலால் அவன் படபடக்கும் கால்களை வெட்டி எறிந்தேன். இது திறம் இல்லையா?” என்றான்.

"நல்லது; நீ தலையை வெட்டாமல் காலை வெட்டு வானேன்" என்றார் அரசர்.

"அதுவா? எனக்கு முன்னாக எவனோ ஒருவன் அவன் தலையை வெட்டிக்கொண்டு போய்விட்டானே, நான் என்ன செய்ய முடியும்" என்றான்.

அரசர் நகைத்தார். நீ அரசவை நகைச் சுவையாளனாக இருக்கத்தக்கவனே அன்றிப் படையாளனாக இருக்கத் தக்க வனல்லன் என்று சொல்லி அரண்மனைக்கு அழைத்துக் கொண்டார். இப்படி முல்லா கதையொன்றும் வழங்குகின்றது.

தெருவில் இருந்த வீரன் ஒருவன் தன் ஆற்றலை விரிவாகக் கூறிக் கொண்டிருந்தான். கூட்டத்தில் இருந்த பலரும் அவன் சொல்வதை ஆர்வத்துடன் ஆடாமல் அசையாமல் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அவன் சொன்னான்; "நான் போரில் நின்றேன்; என்னைச் சூழ்ந்து நின்றவன் ஒருவனா? இரண்டு பேரா? மூன்று பேர்; முரட்டு ஆள்கள்; ஒரே வேளையில் என்னை மோதியழிக்கத் துணிந்து நின்றனர். நான் அஞ்சுவேனா? உடனே என் வாளை