உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பால்

என்ன பால்?

மாட்டுப் பால்

என்ன மாடு?

பசு மாடு

நாட்டுப் பசு

1. பால் பால்

என்ன பசு?

என்ன நாடு?

தமிழ் நாடு

என்ன தமிழ்?

செந்தமிழ்.

2. GÜLLITUIT?

காகம் கரைதல் கேட்டாயா? காலை என்று காட்டாதா? சேவல் கூவக் கேட்டாயா? சிறந்த காலை காட்டாதா? கறவை ஒலியைக் கேட்டாயா? களிப்பாய்க் காலை காட்டாதா? ஆட்டின் ஒலியைக் கேட்டாயா? அதுவே காலை காட்டாதா? ஆவலாக எழுந்திடுவாய்!

ஆகும் கடமை புரிந்திடுவாய்!

3. திசை

கதிரோன் தோன்றும் திசையைப்பார்

காணும் இதுவே கிழக்காகும்