உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

ஓ இளங்குமரனார் தமிழ்வளம் - 33

எதிராம் திசையை எண்ணிப்பார்

இதுவே மேற்குத் திசையாகும்

கதிரைப் பார்த்து நிற்குங்கால்

வலக்கைப் பக்கம் தெற்காகும்

இடக்கைப் பக்கம் வடக்காகும்

இவற்றை அறிந்தால், திசைமாற எந்த இடத்தும் வழியில்லை!

4. பெயர்

கா கா என்னும் காக்கை பார்! கொக்கொக் கென்னும் கொக்கைப் பார்! குக்கூ என்னும் குயிலைப்பார்! குர்க்குர் என்னும் குரங்கைப்பார்! கொண்ட ஒலியால் பெயர்பெற்றுக் கொண்ட வகையை அறிந்திடுவாய்! இயற்கை ஒலியே சொல்லாகும் இயல்பை விளக்கும் இவைதாமே!

5. ஒலி

ஆட்டுக் குட்டி மே மே மே!

ஆவின் கன்று மா மா மா!

பூனைக் குட்டி ஞாவ் ஞாவ் ஞாவ்! நாயின் குட்டி ளொள் ளொள் ளொள்! அணிலின் குஞ்சு கீச் கீச் கீச்!

ஆனால் இவற்றின் பொருளென்ன?

அன்பே அன்பே அன்பொன்றே இவற்றின் பொருளாம் அறிவாயே!

6. ஒலிப்பேர்

நாயின் ஒலியோ குரைத்தல்

நரியின் ஒலியோ ஊளை

குயிலின் ஒலியோ கூவல்