உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

மயிலின் ஒலியோ அகவல் கூகை ஒலியோ குழறல் கிளியின் ஒலியோ மிழற்றல் ஆந்தை ஒலியோ அலறல் வண்டின் ஒலியோ மூசல் குதிரை ஒலியோ கனைத்தல் கழுதை ஒலியோ கத்தல் ஒவ்வோர் ஒலிக்கும் ஒருபேர் உண்டாம் தமிழில் உரைப்பாய்!

7. கிண்கிணி

கிண் கிண் கிண்கிணியாம்

சல் சல் சல்லரியாம்

சில் சில் சிலம்பதுவாம் கல் கல் கலகலப்பாம்

மத் மத் மத்தளமாம்

கொட் கொட் கொட்டாகும் கொக் கொக் கொக்கரையாம்

ஒலிக்கும் ஒலியாலே

ஒன்றும் இவையெல்லாம்.

8. இரட்டைச் சொல்

பளபளக்கும் மின்வெட்டே

சளசளக்கும் மழைப் பொழிவே!

படபடக்கும் இடிமுழக்கம்

கடகடக்கும் மாட்டு வண்டி!

கலகலக்கும் குழந்தையொலி

சலசலக்கும் நீரோட்டம்!

மதமதப்பாய் நில்லாமை

பதபதப்பாய் நடுங்காமை

LO

5