உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ்வளம் -33

கடுகடுப்பாய்ப் பேசாமை

கருத்துடனே எண்ணிப்பார்!

இரட்டையிலே நீங்காமை

இன்னவற்றின் இயல்பறிவாய்!

இரட்டைநீக்கிச் சொல்லிப்பார் இல்லையன்றோ எப்பொருளும்?

தங்கத் தாத்தா பாட்டு

தாடி மீசை காட்டு!

பொன்னுப் பாட்டி பாட்டு

பொக்கை வாயைக் காட்டு!

மாமா மாமா பாட்டு

மகிழ்வாய் வண்டி ஓட்டு!

மாமி மாமி பாட்டு

மல்லிகைப் பூவைச் சூட்டு!

9.பாட்டு

10. ஒன்றும் ஒன்றும்

ஒன்றும் ஒன்றும் இரண்டு

ஓடி எறிவது குண்டு

இரண்டும் இரண்டும் நாலு

பசுவில் கறப்பது பாலு

நாலும் இரண்டும் ஆறு

தட்டில் இருப்பது சோறு

ஆறும் இரண்டும் எட்டு

நெற்றியில் வைப்பது பொட்டு

எட்டும் இரண்டும் பத்து ஒழுக்கம் ஒன்றே சொத்து.