உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல் 11. மாம்பழம்

அருமை அருமை மாம்பழம்;

ஆசை ஆசை மாம்பழம்;

இனிப்பு மிக்க மாம்பழம்;

இன்று வந்த மாம்பழம்;

மாமா தந்த மாம்பழம்; மல்கோவா மாம்பழம்;

தூக்கக் கூட முடியாமல்

தூக்கி வந்த மாம்பழம்;

இத்தனை ஏனாம் மாம்பழம்?

இன்று தானாம் சம்பளம்!

ஏழு நிற வில்லாய்

ஏதுக் கடா தோன்றும்?

வாழு மழை பெய்து

வானம் துளி விட்டால்

வீழும் கதிர் பட்டு

12. வானவில்

வில்லாய் அது தோன்றும்.

13. சிறியதும் பெரியதும்

எத்தனை சிறிய மழைத்துளி!

எப்படி இந்தப் பெருக்காறு? எத்தனை சிறிய முல்லைப்பூ! எத்தனை பெரிய மணமாலை? எத்தனை சிறிய நூலிழை!

எத்தனை பெரிய நல்லாடை!

எத்தனை சிறிய தென்றாலும்

எண்ணம் பெருகின் குன்றாமே!

7