உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

14. கல்வி

கல்வி இனிய கரும்பு - அதைக் கற்க என்றும் விரும்பு.

கற்க விரும்பாக் குறும்பு - பெருங்

காற்றிற் பறக்கும் துரும்பு.

கல்வி நல்ல தேனாம் - நற் கனியின் சாறு தானாம்

கற்க வெறுப்ப தேனாம்? - அதைக்

கருதா வாழ்வு வீணாம்!

கல்வி தானே கண்ணாம் - விரும்பிக் கல்லார் கண்ணோ புண்ணாம்.

கல்வி கண்ணே என்றால் - அதை

இல்லார் வாழ்வு என்னாம்?

15. நிறமாற்றம்

பச்சை மிளகாய் பச்சை

பழுத்தால் அதுவே சிவப்பு!

பாகற் காயோ பச்சை

பழுத்தால் அதுவே மஞ்சள்!

ஆலின் இலையோ பச்சை,

அதுவே பழுத்தால் பழுப்பு!

பயிரின் இயல்பு பச்சை

பருவ மாற்றம் வேறே!

உயிரின் இயல்பும் ஒன்றே உணர்வின் இயல்பு வேறே!

16. சொல்லில் சுவை

இனிப்புச் சுவையே மாம்பழம்;

புளிப்புச் சுவையே எலுமிச்சை;