உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

உறைப்புச் சுவையே மிளகாயாம்; துவர்ப்புச் சுவையே வாழைக்காய்; உவர்ப்புச் சுவையே உப்புக்கல்; கசப்புச் சுவையே பாகற்காய்; ஆறு சுவைகள் இவையென்றால் இவற்றின் கலப்போ ஆயிரமாம்! சுவையைப் பெருக்கும் நாவுடையார் சொல்லும் சொல்லில் சுவையாக்கி நலத்தைப் பெறுதல் பண்பாடு!

நாட்டுக் கினிதாம் பண்பாடு!

17. வண்ணங்கள்

வானம் நீல வண்ணம்பார்!

வயலில் பச்சை வண்ணம்பார்!

பாலில் வெள்ளை வண்ணம்பார்! பவழம் சிவப்பு வண்ணம்பார்! காக்கை கரிய வண்ணம்பார்! ஐந்து வண்ணக் கிளியைப்பார்! ஏழு வண்ண வில்லைப் பார்! எண்ண முடியா வண்ணங்கள் இலையில் பூவில் கண்டறிவாய்!

வண்ணம் பலவே ஆனாலென்?

வருமோர் முட்டல் அங்கில்லை!

எண்ணம் பலவே ஆனாலென்?

இசைந்து வாழல் வாழ்வாமே!

18. பார்! சேர்!

விரிந்த வானம் பார்தம்பி

விரிவின் விரிவைச் சேர்தம்பி;

பரந்த கடலைப் பார்தம்பி

பரந்த உள்ளம் சேர்தம்பி;

9