உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

ஒளிரும் சுடரைப் பார்தம்பி

ஒளியை உன்னுள் சேர்தம்பி;

குளிரும் மதியைப் பார்தம்பி

குளிரும் உள்ளம் சேர்தம்பி;

மலரும் மலரைப் பார்தம்பி மலரும் உளத்தைச் சேர்தம்பி;

இனிய தேனைச் சுவைதம்பி

இன்சொல் உன்சொல் அவைதம்பி!

19. செய்யாதே

காலைச் சுவரில் வையாதே

கறையைப் படியச் செய்யாதே

நீரைக் கொட்டி வடியாதே

நீயே வழுக்கித் துடியாதே!

தாளைக் கிழித்துப் போடாதே

தட்டை வீசி ஆடாதே

கூளம் குப்பை ஆக்காதே

கூட்டி அள்ள வைக்காதே!

கட்டெ றும்பைப் பிடியாதே

சிற்றெ நும்பை மிதியாதே

பல்லி பாச்சை அடியாதே

பாவம் பாவம் பாவமே!

குட்டி முட்டித் திரியாதே

குடுமிச் சண்டை போடாதே

திட்டித் திமிரி அலையாதே

தேனைப் போல மொழிவாயே!

20. பல்லைத்தேய்

பல்லைத்தேய் பல்லைத்தேய் - பாப்பா

பல்லைத்தேய் பல்லைத்தேய்