உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

11

முல்லைப்பூப் போலாக

முத்துக்கள் போலாகப் - (பல்லைத்)

சொள்ளைப்பல் ஆகாமல்

சொத்தைப்பல் ஆகாமல் - (பல்லைத்)

பாலைப்போல் வெள்ளையாய்

பட்டைப்போல் வெள்ளையாய் - {பல்லைத்)

கல்லைப்போல் மண்ணைப்போல்

கண்டொன்றைக் கொள்ளாமல் - (பல்லைத்)

ஆலைப்போல் வேம்பைப்போல்

வேலைப்போல் தேடிப்போய்ப் - (பல்லைத்)

21. பல்லால் பாதி

நல்ல நல்ல பல்லிருந்தால்

நல்ல நல்ல நட்பிருக்கும்

மல்லிகை முல்லைப் பல்லிருந்தால்

எல்லார் முன்னும் சிரித்திடலாம்!

பொல்லா அழுக்குப் பல்லிருந்தால்

போவார் ஓடி வாய்மூடி;

பல்லால் பாதி சிறப்பாகும்

சொல்லால் பாதி சிறப்பாகும்.

22. பாப்பா ஓடிவா

குட்டிப் பாப்பா ஓடிவா;

குண்டுப் பாப்பா ஓடிவா;

சுட்டிப் பாப்பா ஓடிவா;

சுடரும் பாப்பா ஓடிவா;

மொட்டைப் பாப்பா ஓடிவா;

முத்துப் பாப்பா ஓடிவா;

கட்டித் தங்கம் போலவே

கையில் எடுக்க ஓடிவா!