உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

ஆட்டம் ஆடி ஓடிவா;

அழகு காட்டி ஓடிவா;

பாட்டுப் பாடி ஓடிவா;

பையப் பைய ஓடிவா;

ஓட்டம் இன்றி ஓடிவா;

உவகை யாக ஓடிவா;

வாட்ட மில்லா மாலையாய்

வாங்கிக் கொள்ள ஓடிவா.

23. எல்லா நாளும் நன்னாளே

ஞாயி றன்று பிறந்தவனே

நன்மை யெல்லாம் அடைவாயே!

திங்க என்று பிறந்தவனே

திறமை பலவும் பெறுவாயே!

செவ்வாய் அன்று பிறந்தவனே

செல்வச் செழிப்பில் வாழ்வாயே!

புதனாம் நாளில் பிறந்தவனே

புகழில் சிறந்து வாழ்வாயே!

வியாழ னன்று பிறந்தவனே

விளங்கும் அறிவில் உயர்வாயே!

வெள்ளி யன்று பிறந்தவனே

வெற்றி யாவும் பெறுவாயே!

சனியாம் கிழமை பிறந்தவனே

சலியா உறுதி அடைவாயே

எந்த நாளில் பிறந்தாலும்

எந்தக் குறையும் வருவதிலை!

எல்லா நாளும் நன்னாளே!

எவர்க்கும் ஏற்ற பொன்னாளே!

இயற்கை தந்த நாள்களிலே

எவரே குறைகள் காண்பதுவே!