உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

24. கல்! கல்! கல்!

கல் கல் கல்! - குழந்தாய்!

கற்றதைத் தெளிவாய்ச்

சொல் சொல் சொல்!

சொல்! சொல்! சொல்! - குழந்தாய்!

சொல்லிய படியே

நில் நில் நில்!

நில் நில் நில் - குழந்தாய்!

நேயத்தின் உருவாய்ச்

செல் செல் செல்!

செல் செல் செல்! - குழந்தாய் சென்றிடும் துணிவால்

வெல் வெல் வெல்!

25. சந்தை

இன்று சந்தை செல்லலாம் ஏற்ற பொருள்கள் வாங்கலாம்

கிழங்கு தேங்காய் வாங்கலாம் கீழே பையில் போடலாம்

காய்வ கைகள் வாங்கலாம்

கருதி அதன்மேல் போடலாம்

பழவ கைகள் வாங்கலாம் பார்த்தே அதன்மேற் போடலாம்

மல்லி தழைகள் வாங்கலாம் மணக்க மேலே போடலாம்

வாங்கும் திறமும் வேண்டுமே வைக்கும் திறமும் வேண்டுமே

வாங்கும் பொருளால் பயனென்ன வைக்கும் திறமை இல்லாக்கால்!

13