உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

26. வழிகாட்டும் இயற்கை

கோகோ எனக்கூவும் சேவல் - அது போபோ எனஏவும் ஏவல்!

காகா எனக்கரையும் காக்கை - அது காலம் தவறாத வாக்கே!

பண்ணாகப் பாடிடும் வண்டு அது

பகவற்குச் செய்திடும் தொண்டு. விண்ணேறி வந்திடும் வெய்யோன் - அவன்

வேலை இலையெனில் உய்யோம்!

அம்மா எனமுழங்கும் ஆக்கள் - உயர்

அன்னையர் வாழ்கெனும் வாழ்த்தே

சும்மா எவையேனும் உண்டோ? - அவை சொல்லும் பொருளுக் களவுண்டோ?

27. வெள்ளையாடு

அங்கே பாரு வெள்ளாடு

அதற்குக் குட்டி ஐந்தாறு - அங்கே

கருமை வெண்மை கருஞ்சிவப்பு கலந்த நிறங்கள் பலவேனும்

அருமை நிறங்கள் அவையாமே அன்பு நிறங்கள் அவையாமே! பெருமை சிறுமை நிறத்தாலே பேசத் தெரியா வெள்ளாடு

பெருமை உணரா மாந்தர்க்குப் பேசாப் பொருளைப் பேசுவதே!

28. பொம்மை

குட்டிப் பாப்பா பொம்மைபார்

குழந்தைப் பாப்பா பொம்மைபார்