உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி-குழந்தையர் பாடல்

சட்டி வயிற்றுப் பொம்மைபார்

தஞ்சாவூருப் பொம்மை பார்!

தட்டித் தள்ளி விட்டாலும்

தடுக்கி வீழாப் பொம்மைபார்

தட்டி வீழும் நமைப்பார்த்துத்

தானே சிரிக்கும் பொம்மைபார்

29. காக்கா

காக்கா காக்கா காக்காக்கா காலமெல்லாம் காக்காக்கா காக்கை மொழியே காக்காக்கா காணும் பொருளும் காக்காக்கா

என்ன என்ன செய்திகளை இந்தக் காக்கா சொல்கிறதோ? பின்னிக் கிடக்கும் வாழ்வெல்லாம் பேசி விடுமோ காக்காவால்?

ஒலியொன் றாலே உணர்வெல்லாம் உணர்த்தும் காக்கை ஆசானால், ஒலிகள் பலவாம் மொழிவளத்தை உணர வாய்த்தல் பெரும்பேறே.

30. உலகை மதி

உருவிற் பெரிது யானை

உருவிற் சிறிது பூனை

உருவத் தாலே என்ன?

உதவும் வாழ்வுக் கொன்றே!

வீட்டுக் காகும் பானை

பாட்டுக் காகும் மோனை

ஈட்டும் உதவி எண்ணின்

இரண்டும் வேண்டும் தானே!

15