உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

ஏற்றம் இறைக்கும் கூனை

கூற்றம் போலும் தானை

மாற்றம் ஆன வேனும்

வாழ்வுக் குரித்தாம் தானே!

உலகத் துள்ள வெல்லாம்

உதவி யாதல் உண்மை உலகை அறிந்து கொண்டால் உலகை மதிப்போம் நன்றாய்!

ஆவே ஆவே வாவா!

31. ஆவே ஆவே!

அம்மா அம்மா வாவா!

தாயே பசுவே வாவா!

தடவித் தருவேன் வாவா!

வேளை தோறும் நீயே,

விரும்பும் பாலைத் தருவாய்!

காளை கன்றும் தருவாய்!

காட்டுக் குரமும் தருவாய்!

அமைதி யான உனக்கே,

அமைந்த கொம்பும் எதற்கே?

சுமையாய் எண்ணிக் கொண்டேன்,

சொல்வாய் பயனும் உண்டோ?

பாம்பு வாலும் உனக்கே,

பாழாய் அமைந்த தென்றே,

வீம்பாய் எண்ணிக் கொண்டேன்!

விரும்பும் பயனும் உண்டோ?

ஈயும் கொசுவும் பார்த்தேன்

இவற்றை ஓட்ட ஆட்டி

நீயும் காட்டத் தெரிந்தேன்

நேரும் பயனை உணர்ந்தேன்.