உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

எந்த உயிரும் பயனே

எந்த உறுப்பும் பயனே

அந்தப் பயனை உணர்ந்தே

ஆக்க மாக்கல் கடனே!

32. சிட்டுக் குருவி

சிட்டுக் குருவி கிட்டேவா!

சிறிய குருவி கிட்டேவா! பட்டுக் கறுப்பே கிட்டேவா! பளிங்குக் கறுப்பே கிட்டேவா!

எட்டி எட்டி நடந்தாலும், கிட்டக் கிட்ட என்நடையைத், தொட்டுக் கூட நெருங்காத சிட்டே சிட்டே கிட்டேவா!

எட்டில் சிறுத்த சிட்டேநீ! எட்ட மாட்டா உயரத்தைத் தொட்டுப் பறப்பாய் உனைமுத்தம் கொட்டிப் பொழிவேன் கிட்டேவா!

துள்ளி நடக்கும் சிட்டேநீ துவளும் குழந்தை மொட்டேநீ அள்ளும் பந்துத் தட்டேநீ

அயரா இயக்க வட்டேநீ!

மாட்டின் வாலோ நெட்டை

ஆட்டின் வாலோ குட்டை

நாயின் வாலோ மேலே

நரியின் வாலோ கீழே

அணிலின் வாலோ கற்றை எலியின் வாலோ மொட்டை

33. வால்

17