உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

குரங்கின் வாலோ வாலி

குருவி ஒன்றும் வாலி

வாலில் லாதும் குரங்காம்

வையம் புதுமைக் கரங்காம்!

34. இளமையும் முதுமையும்

முருகன் மிகவும் நல்லவன்;

மூர்த்தி தானும் நல்லவன்; அருகே நாங்கள் இருக்கிறோம் அன்பு நண்பாய் இருக்கிறோம்!

சாலமோனும் நல்லவன்; சலீமும் மிகவே நல்லவன்; பாலும் தேனும் போலவே பழகி நாங்கள் வாழ்கிறோம்!

எங்கள் உள்ளம் இனியவே; எங்கள் உறவும் இனியவே; உங்கள் உள்ளம் எப்படி, உறவு தானும் அப்படி!

இளமை தானே முதுமையாய்

என்றும் வளரக் காண்கிறோம்!

இளமை வளர்ச்சி சண்டையா? என்ன கொடுமை கண்டதே!

குழந்தை கள்போல் முதியரும் கூடி வாழ வேண்டுமே! பழுத்த பழத்தின் சுவையதும் பாரும் பிஞ்சில் குறைந்ததோ?

வழியைக் காட்டும் பெரியவர்

வழியைத் தவறிப் போவதால்

பழியும் மிகுமே பாவமும்

பல்கிப் பெருகி ஆகுமே!