உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி - குழந்தையர் பாடல்

35. கிளி

பச்சைக் கிளியைப் பார்பார்!

பவழ வாயைப் பார் பார்!

ஒற்றைக் காலை ஊன்றி, உண்ணும் அழகைப் பார்பார்!

வாலின் நீளம் பார்பார்! வண்ணக் கழுத்தைப் பார்பார்! ஆலம் பழமோ வாய்க்குள், அன்றிப் பவழம் தானோ?

பெட்டைக் கிளியைப் பார்பார்!

பிள்ளைக் கிளியைப் பார்பார்!

கொட்டை உடைக்கும் வாயால், கொஞ்சும் அழகைப் பார்பார்!

ஐந்து வண்ணம் கொண்ட அழகுக் கிளியைப் பார்! பார்!

கொஞ்சிக் குலவி நிற்கும்

கொள்ளை இன்பம் பார் பார்!

36. விலங்குக் காட்சிக்கு வரவேண்டா

யானை யாரும் வருவாராம்

அரிய காட்சி தருவாராம்.

பூனை யாரே போகாதீர்

புதைந்து காலுள் சாகாதீர்!

தீயே விழியாம் புலியுண்டு

திகைத்துப் போவாய் கிலிகொண்டு

நாயே நாயே போகாதே

நடுங்கிப் பதறிச் சாகாதே!

19