உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

37. தவளையார்

தவளை யாரும் வருகின்றார்; தாவ முடியா துருள்கின்றார்; தவலைப் பானை பிடிக்கின்ற

தண்ணீர் ஏனோ குடிக்கின்றார்?

குரலை உயர்த்தி இடிக்கின்றார் கொட்டும் முரசை மடக்கிவிட!

உரலில் குழவி இரைந்தாலும்

ஒட்டி வருமோ சிநிதேனும்?

தொண்டைப் பறையை அடிக்கின்றார்

தூள்தூள் என்றே துடிக்கின்றார்;

சண்டைக் காக எழுந்தாரா?

சரிதான் பகைவர் விழுந்தாரே!

38.பூனை

பூனை நல்ல அழகாம்!

புதிய குட்டி அழகாம்!

தேனைத் தொட்ட மென்மை

திகழும் பூனைத் தன்மை!

மெத்தைக் காலின் பூனை; மெதுவாய் ஏறும் பானை; மொத்தைத் தயிரைக் குடிக்கும், மூலை பார்த்துப் படுக்கும்!

பகலில் அமைதி கொள்ளும்; இரவில் எழுச்சி துள்ளும்; அகலும் கண்கள் சுருங்கின், அந்த அமைதி நெருங்கும்!

குப்பைக் கிடந்தால் எலிகள் கூடிக் குலாவும் புலிகள்